சென்னை அம்பத்தூர் பகுதியை சேர்ந்த ஜெயக் குமாரி மகள் காயத்ரி பார்மசிஸ்ட் இளங்கலை பட்டப்படிப்பு முடித்துவிட்டு கன்னிமாரா லைப்ரரியில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இவருக்கும் தர்மபுரியைச் சேர்ந்த ராமலிங்கம் மகன் பார்மசிஸ்ட் படித்துள்ள விஸ்வநாதனுக்கும் வரும் 31ம் தேதி திருமணம் நடைபெற இருக்கிறது. அத்துடன் இவர்களது திருமண வரவேற்பு சென்னை வெப்பேரியிலுள்ள ஒய் எம்.சி.ஏ அரங்கில் நடைபெற இருகிறது.
இந்த நிலையில் மணப் பெண் காயத்ரி தன் திருமணத்தின் அழைப்பிதழ் வித்தியாசமாகவும், அனைவராலும் கவரப்பட வேண்டும் என எண்ணி தன் வரவேற்பு பத்திரிக்கையை மாத்திரைகள் உள்ள டப்பா வடிவில் அச்சிட்டு இருக்கிறார். அந்த டப்பாவின் அனைத்து பகுதிகளிலும் தங்களது திருமணம் மற்றும் வரவேற்பு குறித்த விவரங்கள் குறிப்பிடப்பட்டு உள்ளது. இந்த வரவேற்பு அழைப்பிதழானது அனைவரையும் கவர்ந்து வருகிறது. மேலும் தற்போது இது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.