செய்தியாளர்களிடம் பேசிய அதிமுகவின் தேனி மாவட்ட செயலாளரும், ஓபிஎஸ் ஆதரவாளருமான சயத்கான், இன்றைக்கும் ஓபிஎஸ் என்ன சொல்கிறார் என்றால், இரட்டை தலைமை இருக்கட்டும், ஏற்கனவே தேர்ந்தெடுத்தது, அப்படியே இருக்கட்டும், அதனால் எந்த பிரச்சனையும் கிடையாது. ஏனென்றால் 4 வருடமாக அரசாங்கம் நடந்தது, அப்போது எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக இருந்தார், அப்போதெல்லாம் ஒன்றுமில்லை.
இன்றைக்கு கட்சியை முழுவதும் தன் வசப்படுத்த வேண்டும் என்று நினைக்கிறார், அது தான் இந்த பிரச்சனைக்கு முக்கிய காரணமே அதுதான். எடப்பாடி பழனிச்சாமி மட்டும் இரட்டைத் தன்மை வேண்டாம் என்று சொல்லி இருந்தால் இந்த பிரச்சனையே வந்து இருக்காது. இரட்டை தலைமை வேண்டாம் என்று அவரே சொல்லிக் கொண்டிருக்கிறார்.
பொதுக்குழு உறுப்பினர்கள் கூப்பிட்டு உட்கார வைத்துக்கொண்டு, அதில் வந்தவர்களில் பாதி பேர் உண்மையான பொதுக்குழு உறுப்பினர்களே கிடையாது. மாற்று கட்சியாக இருந்தாலும், எந்த கட்சியாக இருந்தாலும் அவர்கள் அண்ணா திமுக நடவடிக்கை சரியாக தான் இருக்கிறது என்று சொன்னால் ஏற்றுக் கொள்கிறோம். நான் மட்டுமல்ல தமிழ்நாடு ஏற்றுக்கொள்ளும் என தெரிவித்தார்.