Categories
மாநில செய்திகள்

“அ.தி.மு.க ஒற்றை தலைமை”…. இன்று விசாரணைக்கு வந்த இபிஎஸ் மேல்முறையீட்டு மனு….!!!!

சென்ற ஜூலை 11ம் தேதி சென்னையில் நடைபெற்ற அ.தி.மு.க பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்கக்கோரி ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அதிமுக பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து போன்றோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்நிலையில் இவ்வழக்கை விசாரித்த நீதிபதி ஜூலை 11ம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டம் செல்லாது எனவும் அ.தி.மு.க-வில் ஜூன் 23ம் தேதிக்கு முன் இருந்த நிலையே நீடிக்கவேண்டும் எனவும் தீர்ப்பளித்து இருந்தார். பொதுக் குழு மற்றும் செயற்குழுவை ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து தான் கூட்டவேண்டும் எனவும் பொதுக்குழு உறுப்பினர்களில் 5-ல் ஒரு பங்கு உறுப்பினர்கள் பொதுக் குழுவை கூட்ட வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டது.

இதனால் 15 தினங்களில் நோட்டீஸ் வெளியிட்டு, 30 நாட்களில் பொதுக் குழுவை இருவரும் இணைந்து கூட்ட வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளார். அவ்வாறு இருவரும் இணைந்து கூட்டுவதில் சிக்கல் ஏற்படும் பட்சத்தில், பொதுக் குழு கூட்டும் நடைமுறையை கண்காணிக்க ஆணையரை நியமிக்கும்படி நீதிமன்றத்தை நாடலாம் எனவும் உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவு ஓ.பன்னீர்செல்வம் தரப்பை குஷிப்படுத்திய நிலையில், எடப்பாடி பழனிசாமி தரப்பு அதிர்ச்சியடைந்தது. அதன்பின் எடப்பாடி பழனிசாமி தரப்பு அவசர ஆலோசனையில் ஈடுபட்ட நிலையில், உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் எம்.துரைசாமி, சவுந்தர் மோகன் போன்றோர் அடங்கிய அமர்வில் எடப்பாடிபழனிசாமி தரப்பு முறையீடு செய்தனர்.

இந்த நிலையில் பொதுக்குழுவுக்கு எதிராக ஓ.பன்னீர் செல்வம் தொடர்ந்திருந்த வழக்கில் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது செல்லாது என்று தீர்ப்பு வந்தது. இதனை எதிர்த்து எடப்பாடிபழனிசாமி மேல் முறையீடு செய்துள்ளார். இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அதில் தங்களது தரப்பு வாதங்களை இருதரப்பும் இன்று எடுத்து கூறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆகவே இவ்வழக்கு விசாரணையை ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் ஆர்வமோடு எதிர்பார்த்து காத்துள்ளனர்.

Categories

Tech |