டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பதவியேற்பு விழாவில் பங்கேற்க பிற மாநில முதல்வர்கள் அழைக்கப்படவில்லை என ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது.
கடந்த 8-ஆம்தேதி 70 உறுப்பினர்களை கொண்ட டெல்லி சட்டசபை தேர்தலுக்கான வாக்கு பதிவு நடந்து முடிந்து, வாக்கு எண்ணிக்கை 11 ஆம் தேதி (நேற்று முன்தினம்) நடந்தது. இந்த தேர்தல் முடிவில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி 62 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. டெல்லி சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க 36 உறுப்பினர்கள் தேவை என்ற நிலையில், ஆம் ஆத்மி கட்சி தொடர்ந்து 3-வது முறையாக ஆட்சி அமைக்கிறது. அதை தொடர்ந்து வரும் 16 ஆம் தேதி கெஜ்ரிவால் முதல்வராக பதவி ஏற்க உள்ளார். இந்த பதவியேற்பு விழா ராம்லீலா மைதானத்தில் நடைபெறுள்ளது.
இந்த நிலையில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பதவியேற்பு விழாவில் பங்கேற்க பிற மாநில முதல்வர்கள், பிற மாநில பிரமுகர்கள் மற்றும் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என ஆம் ஆத்மி கட்சியின் கோபால் ராய் தகவல் தெரிவித்துள்ளார்.