திரையுலகில் பட வாய்ப்பு கேட்கும் நடிகைகளை படுக்கைக்கு அழைப்பதாக மீ டூ வில் புகார் தெரிவித்து வருகிறார்கள். அந்த வரிசையில் ‘நட்பதிகாரம் 79’ பட நடிகை தேஜஸ்வி மடிவாடா அளித்துள்ள பேட்டியில், ”வாய்ப்புகளுக்காக பெண்களை படுக்கைக்கு அழைக்கும் கலாசாரம் அனைத்து துறைகளிலும் இருக்கிறது. சர்வதேச நிறுவனங்களில் பணிபுரியும் எனது தோழிகள் இது போன்ற தொல்லைகளை சந்திக்க நேர்ந்தது எனக்கு தெரியும்.
ஆனால் சினிமாவில் மட்டும் படுக்கைக்கு அழைப்பது என்பது பிரபலமாகி விட்டது. நானும் பாலியல் தொல்லையை எதிர்கொண்டேன். நடிக்க வந்த புதிதில் எனக்கு பாலியல் ரீதியாக அழைப்புகள் வந்தன” என்று தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது