ஓசூர் அரசு மருத்துவமனையை 99.61 கோடி தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கூறியுள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஊத்தங்கரை தாலுகா காரப்பட்டு ஊத்தங்கரை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நேற்று நடைபெற்ற கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
அப்பொழுது அவர் பத்திரிக்கையாளர்களிடம் கூறியுள்ளதாவது, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருக்கும் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள் உள்ளிட்டவற்றில் 14 கோடியே 12 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ள முதல்வர் உத்தரவிட்டிருக்கின்றார்.
கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 50 படுக்கை வசதி கொண்ட தீவிர சிகிச்சை பிரிவு ரூபாய் 23 கோடியே 75 லட்சம் மதிப்பிலும், 13 லட்சம் மதிப்பில் ரத்த சுத்திகரிப்பு பிரிவு மற்றும் சிறுநீரக செயலிழப்பு சிகிச்சைக்கான நவீன உபகரணங்கள் மற்றும் தொலை மருத்துவ சேவைகளும் தொடங்கப்பட இருக்கின்றது.
மேலும் ஓசூர் அரசு மருத்துவமனையில் 9 கோடியே 61 லட்சம் மதிப்பில் தரம் உயர்த்தப்படும். 5.26 லட்சம் மதிப்பீட்டில் அரசு மருத்துவமனைகளில் விபத்து மற்றும் சிகிச்சை மையங்களில் விபத்துக்கான தரவுகளை பதிவேற்றம் செய்தல், பாரூர், மேகலசின்னம்பள்ளி, பாகலூர் உள்ளிட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு புதிய கட்டிடங்கள் கட்டப்பட இருக்கின்றது என அவர் கூறியுள்ளார்.