பள்ளி சென்று வருகையில் பாலியல் தொல்லை கொடுத்ததாக வடமாநில தொழிலாளியை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
செங்கல்பட்டு மாவட்டம் முள்ளிப்பாக்கம் அருகே அடுக்குமாடி கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணியில் பீகார் மாநிலத்தை சேர்ந்த பலர் தொழிலாளிகளாக வேலை பார்த்து வருகின்றனர்.
இவர்களில் ஒருவரான ராம் சர்மா அவ்வழியாக சென்ற பிளஸ் 1 மாணவி ஒருவரை மிரட்டி மறைவான இடத்திற்கு அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரியவந்துள்ளது. இதனையடுத்து மாணவி அச்சத்தில் கூச்சலிட்டு உள்ளார். மாணவியின் அலறல் சத்தம் கேட்டு அவ்வழியே சென்றவர்கள் கூடி மாணவியை மீட்டுள்ளன.ர் இதனால் ராம் ஷர்மா தப்பியோடியுள்ளார்.
இதுபற்றி அறிந்ததும் மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பொதுமக்கள் என கட்டிடப் பணி நடக்கும் இடத்தில் கூடி போராட்டம் நடத்தியுள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் தப்பியோடிய ராம் சர்மாவை தேடி வருகின்றனர்.