திருமங்கலம் அருகே இருக்கும் ரேஷன் கடையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதில் சாக்குகள் இலவச வேட்டிகள் எரிந்து நாசமானது.
மதுரை மாவட்டத்திலுள்ள திருமங்கலம் அருகே இருக்கும் சின்ன உலகாணி கிராமத்தில் இருக்கும் ரேஷன் கடை நேற்று பூட்டப்பட்டு இருந்துள்ளது. இதில் திடீரென புகை வந்ததால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்த அங்கு சென்று பார்த்த பொழுது கடைக்குள் தீ பற்றி எரிந்தது. இதனால் தீயை அவர்கள் அணைக்க முயன்றார்கள். ஆனால் அது மளமளவென பரவியதால் தீயை கட்டுப்படுத்த முடியவில்லை.
இதனால் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் விரைந்து செயல்பட்டு தீயை ஓரளவிற்கு கட்டுப்படுத்தினார்கள். பின் கடை கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த பொழுது அடுக்கி வைக்கப்பட்டிருந்த சாக்குகளில் தீ பற்றி எரிந்தது தெரிய வந்தது. இதன் பின் தீயணைப்பு வீரர்கள் சாக்குகளை அப்புறப்படுத்தினார்கள். இந்த தீ விபத்தில் 2500க்கும் மேற்பட்ட சாக்குகளும் 100க்கும் மேற்பட்ட இலவச வேட்டி-சேலைகளும் தீயில் ஏரிந்து நாசமானது. இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள்.