அமெரிக்க நாட்டில் சிறிய வகை விமானம் ஒன்று, போக்குவரத்து நெரிசல் நிறைந்த சாலையில் விழுந்து விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
அமெரிக்க நாட்டின் புளோரிடா மாகாணத்தில் போக்குவரத்து நெரிசல் நிறைந்த சாலையில் திடீரென்று ஒரு விமானம் விழுந்து விபத்துக்குள்ளானது. இதனால் பெரும் பதற்றம் ஏற்பட்டது. அதன்பின் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், அந்த விமானத்தில் எரிபொருள் தீர்ந்ததாக கூறப்பட்டிருக்கிறது.
ஒரு விமானம் புறப்படும் போது எரிபொருள் போன்றவை குறித்து உறுதி செய்திருக்க வேண்டும். இல்லையெனில் உடனடியாக கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவித்திருக்க வேண்டும். இப்படி சாலையிலா விமானத்தை அதிரடியாக தரையிறக்கி விபத்துக்குள்ளாக்குவது? என்று பெரும் சர்ச்சை கிளம்பியது.
இந்நிலையில், இந்த விமானத்தை இயக்கி வந்த விமானி, விமானத்தின் ரேடியோவில் பழுது ஏற்பட்டது. எனவே கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொள்ள முடியாமல் போய்விட்டது என்று கூறியிருக்கிறார். அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பிய அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுக் கொண்டிருக்கிறார்.