பெண்ணை கடத்திய 3 பேரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஒரு பகுதியில் 28 வயதுடைய ஒரு பெண் வசித்து வருகிறார். இவரது கணவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் அந்த பெண் மறுமணம் செய்து கொள்வதற்காக விவாகரத்து ஆனவர்களுக்கான திருமண தகவல் மையத்தில் இணையதளம் மூலம் பதிவு செய்துள்ளார். இந்நிலையில் அதே திருமண மையத்தில் பதிவு செய்திருந்த கும்பகோணத்தை சேர்ந்த ஒருவர் இந்த பெண்ணின் முகவரியை பார்த்துள்ளார். இதனையடுத்து அவர் அந்த பெண்ணை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு பேசி நான் உங்களை நேரில் சந்திக்க விரும்புகிறேன். எனவே நீங்கள் தஞ்சை நகரில் அமைந்துள்ள ஒரு ஓட்டலுக்கு வாருங்கள் என கூறியுள்ளார். இதனை நம்பிய அந்த பெண்ணும் தஞ்சை நகரில் உள்ள ஒரு ஓட்டலுக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு 3 பேர் இருந்துள்ளனர்.
இதனை பார்த்த அதிர்ச்சி அடைந்த அந்த பெண் அவர்களிடம் தகராறு செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் அந்த பெண்ணை காரில் அழைத்துச் சென்றனர். இந்நிலையில் கார் வெண்ணாற்றங்கரை பகுதியில் சென்ற போது அவர்கள் அந்த பெண்ணிற்கு மதுபானம் கலந்த குளிர்பானத்தை கொடுத்து தவறாக நடக்க முயன்றுள்ளனர். இதனால் அந்த பெண் சத்தம் போட்டு கத்தியுள்ளார். இந்த பெண்ணின் சத்தம் கேட்டு வந்த அப்பகுதி பொதுமக்கள் காரை மடக்கி பிடித்தனர். ஆனால் அந்த 3 பேரும் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். இது குறித்து பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் காயமடைந்த அந்த பெண்ணை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் நடந்தது குறித்து அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.