Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

பிரிந்து சென்ற குடும்பம்…. நெசவு தொழிலாளியின் விபரீத முடிவு…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

நெசவு தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஒண்ணுபுரம் பகுதியில் நெசவு தொழிலாளியான கணேசன் என்பவர்  வசித்து வந்துள்ளார். இவர் சில ஆண்டுகளுக்கு அதே பகுதியை சேர்ந்த ராஜேஸ்வரி என்பவரிடம் கடன் வாங்கியுள்ளார். இந்நிலையில் ராஜேஸ்வரி தான் கொடுத்த கடனை திரும்ப கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கணேசன் ராஜேஸ்வரியை  எரித்து கொலை செய்துள்ளார். இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் கணேசனை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனால் கணேசனின் மனைவி மற்றும் குழந்தைகள் சென்னைக்கு சென்று விட்டனர். இந்நிலையில் கடந்த மாதம் கணேசன்  வெளி வந்தார்.

இதனையடுத்து கணேசன் தனது மனைவி மற்றும் குழந்தைகளை தன்னுடன் வருமாறு கூறியுள்ளார். ஆனால் அவர்கள் வரவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்து கணேசன் நேற்று வீட்டில்  தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் கணேசனின் சடலத்தை  கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பித்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |