Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மருத்துவமனைக்கு சென்ற மகள்…. காதலனோடு திரும்பி வந்த இளம்பெண்…. அதிர்ச்சியில் பெற்றோர்…!!

காதல் திருமணம் செய்த ஜோடி காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வலியவிளாகம் பகுதியில் சுந்தர்ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நிவேதா(21) என்ற மகள் உள்ளார். இவர் மருத்துவமனைக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டில் இருந்து புறப்பட்டார். ஆனால் நிவேதா வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் உறவினர்கள் அவரை பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தனர். ஆனாலும் நிவேதாவை கண்டுபிடிக்க இயலவில்லை.

இதுகுறித்து சுந்தர்ராஜ் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் நிவேதாவை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் நிவேதா சிவகுமார் என்பவரை திருமணம் செய்து கொண்டு பாதுகாப்பு கேட்டு காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தார். இதனை அடுத்து போலீசார் இரு வீட்டாரையும் அழைத்து பேச்சு வார்த்தை நடத்தினர். பின்னர் காதல் ஜோடியை சிவகுமாரின் பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.

Categories

Tech |