அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ராயக்கோட்டை பகுதியில் தறி தொழிலாளியான முனுசாமி(43) என்பவர் வசித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் வேலை முடிந்து முனுசாமி மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் சஜ்ஜலப்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே சென்றபோது அவ்வழியாக வேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் முனுசாமி மற்றும் சாலையோரம் நடந்து சென்ற பெருமாள் ஆகியோர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த முனுசாமி சம்பவ இடத்திலேயே பிரதாபமாக உயிரிழந்தார். இதனை அடுத்து படுகாயமடைந்த பெருமாளை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.