விமான நிலையத்தில் 2-வது ஓடுபாதைக்கு இடையூறாக இருக்கும் கட்டிடங்களை அகற்ற வேண்டும் என ஆலோசனை குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை மாவட்டத்தில் உள்ள மீனம்பாக்கம் விமான நிலையத்தில் விமான சேவை விரிவாக்கம் குறித்து விமான நிலைய ஆலோசனை குழு ஆய்வு கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்தக் கூட்டத்தில் விமான நிலைய ஆலோசனை குழு தலைவரும் தி.மு.க நாடாளுமன்ற குழு தலைவருமான டி.ஆர். பாலு எம்.பி தலைமை தாங்கியுள்ளார். இதில் விமான நிலைய இயக்குனர் சரத்குமார் உள்பட பல அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர். இதனை அடுத்து சென்னை விமான நிலைய முனையங்கள் மற்றும் விமான ஓடுபாதை பகுதிகளில் மேற்கொள்ள வேண்டிய மேம்பாடுகள் மற்றும் விமானங்கள் தரையிறங்கும் போது எதிர்கொள்ளும் சிக்கல்கள் தொடர்பாக விவாதிக்கப்பட்டுள்ளது.
இதில் 2.8 கிலோமீட்டர் நீளம் கொண்ட விமான நிலைய 2-வது ஓடுபாதையில் 2.1 கிலோமீட்டர் தூரம் வரை தான் பயன்படுத்தப்பட்டு வருகிறது. எனவே மீதம் இருக்கும் 700 மீட்டர் தூரம் வரை ஓடுபாதை பயன்படுத்த இடையூறாக இருக்கும் கட்டிடங்களை விரைவாக அகற்றப்பட வேண்டும் என தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. மேலும் விமானங்கள் சென்னையில் தரையிறங்கும் போது காமராஜர் உள்நாட்டு நிலையம் மற்றும் அண்ணா பன்னாட்டு முனைவர் அறிவிப்பு செயல்பட வேண்டும் என விமான நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு விமான நிலையச் செய்தி குறிப்பில் வெளியிடப்பட்டுள்ளது.