அழகு கலை நிபுணரான சிரின் முராட் (25), தனது விடுமுறையை கழிக்க பல்கேரியாவுக்கு சென்றிருந்தார். அங்கே கடற்கரை ஓரமாக படுத்துக்கொண்டு சன்பாத் எடுத்தார். ஆனால் அவர் சன் லோஷன் எதுவும் பயன்படுத்தாமல் சுமார் 30 நிமிடங்கள் அங்கே உறங்கியுள்ளார். சிறிது நேரத்திற்கு பிறகு கண் முழித்த அவர், தனது முகத்தை பார்த்தபோது அது சிவந்திருந்தது.
இதனை கண்ட அவர் சரியாகிவிடும் எண்ணி, மீண்டும் சுமார் 21 டிகிரி செல்ஸியஸ் அளவிலான வெயிலில் படுத்துள்ளார். இதையடுத்து மறுநாள் அவர் தனது முகத்தை பார்த்தபோது, அவரது நெற்றி பிளாஸ்டிக் போல் உரிந்து காணப்பட்டது. அவர் மருத்துவமனை செல்லாத நிலையில் நாளடைவில் அந்த தோல், தானாக உரிந்து வந்துள்ளது. இந்த சம்பவம் வைரலாகி வருகிறது.