ராமர் பாலத்திற்கு ஆதரவாக பிராமண பத்திரம் தாக்கல் செய்யவில்லை என்றால் 2024 ஆம் ஆண்டு மோடி மீண்டும் பிரதமராக மாட்டார் என்று பாஜக மாநிலங்களவை உறுப்பினர் சுப்பிரமணியசுவாமி தெரிவித்துள்ளார். ராமர் பாலத்தை இந்தியாவின் பண்டைய பாரம்பரிய நினைவு சின்னமாக அறிவிக்கும்படி பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார்.
இந்த வழக்கு விசாரணையில், ராம் சேது நினைவுச் சின்னம்மா ஆம் அல்லது இல்லை என பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்யும்படி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதில் ஆம் என்றால் எனக்கு வெற்றி,இல்லையென்றால் 2004 ஆம் ஆண்டு பிரதமர் மோடிக்கு தோல்வி என சுப்பிரமணியன் சுவாமி triterரில் பதிவிட்டுள்ளார்.