வேலூர் அருகே 100 கிராம் கஞ்சா கடத்தி சென்ற கஞ்சா வியாபாரி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
வேலூர் மாவட்டம் வாணபுரம் பகுதியை அடுத்த தங்கம் பட்டு கிராமம் அருகே காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வாலிபர் ஒருவர் RX 100 வாகனத்தில் பயங்கர சத்தத்துடன் அதிவேகமாக வந்து கொண்டிருந்தார்.
இந்த சத்தத்தால் எரிச்சல் அடைந்த காவல்துறையினர் ஆத்திரத்துடன் வாகனத்தை நிறுத்தி இளைஞரை கண்டித்து பின் அவரது வாகனம் முழுமைக்கும் பிரித்து சோதனையிட்டனர். அப்போது அதில் 100 கிராம் கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்ததில், அவர் வேலையம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த மணிவேல் என்பதும் அவர் ஒரு கஞ்சா வியாபாரி என்பதும் தெரியவந்தது. இதையடுத்து காவல்துறையினர் அவர் மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.