திருவள்ளூர் அருகே திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் 8 வீடுகள் எரிந்து நாசமான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியப் பகுதியான அருந்ததி புரத்தில் நேற்றைய தினம் திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் எட்டு வீடுகள் பற்றி எரிய தொடங்கின. உடனடியாக வீட்டை விட்டு வெளியேறிய எட்டு குடும்பத்தினரும் தீயை அணைக்க பாடுபட்டனர். பின் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு விரைந்த அவர்கள் தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
இருப்பினும் வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் தீயில் கருகி நாசமாகின. வீடுகளை இழந்து நடுத்தெருவில் நின்ற 8 குடும்பத்தினரையும் கடம்பத்தூர் அதிமுக ஒன்றிய தலைவரும், கடம்பத்தூர் அதிமுக தலைவரும் நேரில் சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் கூறியதோடு அரிசி உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை வழங்கினர். திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் 8 வீடுகள் நாசமான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.