விழா காலங்கள் நெருங்குவதால் பொதுமக்கள் ஷாப்பிங் செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
உலக அளவில் கடந்த 2 வருடங்களாக கொரோனா பெருந்தொற்று பரவியதன் காரணமாக பண்டிகைகள் மற்றும் திருவிழாக்கள் போன்றவைகள் முடங்கியது. இந்த கொரோனா தொற்று தற்போது குறைந்து அதன் காரணமாக பண்டிகைகள் மற்றும் திருவிழாக்களை நடத்துவதற்கு அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது விழாக் காலங்கள் நெருங்குவதால், பொதுமக்கள் பண்டிகைக்கான பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவதாக சர்வே முடிவுகள் கூறுகிறது. இதனையடுத்து தற்போது விழாக்காலங்களை முன்னிட்டு பொதுமக்கள் வாங்க முடிவு செய்திருக்கும் பொருட்கள் குறித்து பார்க்கலாம்.
அதன்படி பொதுமக்கள் டிவி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின் போன்ற வீட்டு உபயோக பொருட்களை வாங்குவதற்கு முதலில் திட்டமிட்டுள்ளனர். இதன் காரணமாக வீட்டு உபயோகப் பொருட்களின் விலை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோன்று சில அத்தியாவசிய பொருட்கள், உணவு பொருட்கள் மற்றும் கார், பைக் போன்ற வாகனங்களின் விலையும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிக வட்டிக்கு கடன் வாங்கியவர்கள் குறைந்த வட்டிக்கு ட்ரான்ஸ்ஃபர் செய்து கொள்ளலாம். மேலும் வழக்கம் போல் விழாக்காலங்களில் இருக்கும் சலுகைகள் அனைத்து பொருட்களிலும் இந்த வருடமும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.