Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னையில் கொட்டி தீர்த்த மழை…. பெங்களூருக்கு திருப்பிவிடப்பட்ட விமானங்கள்….!!!!

சென்னை மற்றும் புற நகர் பகுதியில் நேற்றிரவு 8 மணியிலிருந்து இடி-மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் சென்னை மீனம்பாக்கம் விமானநிலையத்தில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டது. துபாயிலிருந்து இரவு 8:30 மணிக்கு சென்னை வந்த பயணிகள் விமானமானது தரை இறங்க முடியாமல் பெங்களூருக்கு திருப்பியனுப்பப்பட்டது. அதேபோன்று இரவு 8:35 மணிக்கு லக்னோவிலிருந்து வந்த விமானமும், இரவு 8:50 மணிக்கு பக்ரைன் மற்றும் மும்பையிலிருந்து வந்த 2 விமானங்களும், 9:25 மணிக்கு ஹாங்காங்கிலிருந்து வந்த விமானமும் மழையால் சென்னையில் தரையிறங்க முடியாமல் பெங்களூருக்கு திருப்பி விடப்பட்டது.

மேலும் பெங்களூரு, மும்பை, கோவா போன்ற விமானங்கள் தரை இறங்க முடியாமல் நீண்டநேரம் வானிலே வட்டமடித்து கொண்டு இருந்தது. அத்துடன் சென்னையிருந்து திருச்சி, அபுதாபி, டெல்லி, மும்பை, கோவை, கொல்கத்தா, ஐதராபாத், பெங்களூரு போக வேண்டிய 12க்கும் அதிகமான விமானங்கள் 1 மணி முதல் 3 மணிநேரம் வரை தாமதமாக புறப்பட்டு செல்லும் என அதிகாரிகள் கூறினர். அதனை தொடர்ந்து சென்னையில் வானிலை சீரடைந்ததும் விமானசேவைகள் வழக்கம்போல் இயக்கப்படும். பெங்களூருக்கு திருப்பி விடப்பட்ட 5 விமானங்களும் மீண்டுமாக சென்னைக்கு திரும்பிவரும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Categories

Tech |