பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் புதுச்சேரியில் 21 வயது முதல் 57 வயது வரை உள்ள குடும்பத் தலைவிகளுக்கு ரூ. 1000 நிதி உதவி வழங்கப்படும் என தேர்தல் வாக்குறுதியாக அறிவிக்கப்பட்டது. அதன்படி நிதிநிலை அறிக்கையில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூபாய் 1000 வழங்கப்படும் என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இது வரவேற்கத்தக்கது. ஏனென்றால் 21 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு மாதம் 1000 நிதியுதவி என அறிவிக்கப்பட்டதால், 21 வயதுக்கு முன்பாக நடைபெறும் திருமணங்கள் குறைவதற்கு பெரும் அளவு வாய்ப்புள்ளது.
இதேபோன்று தமிழகத்திலும் திமுக அரசு ஆட்சிக்கு வந்தால் குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூபாய் 1000 வழங்கப்படும் என தேர்தல் வாக்குறுதியாக அறிவித்திருந்தது. இந்நிலையில் திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்று நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட பிறகும், குடும்ப தலைவிகளுக்கு மாதம் 100 நிதியுதவி தொடர்பாக எந்த ஒரு அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. எனவே குடும்ப தலைவிகளுக்கு மாதம் 1000 நிதியுதவி வழங்கி தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும். மேலும் அரசு காலதாமதம் செய்யாமல் 1000 நிதியுதவி தொடர்பான அறிவிப்பை உடனடியாக வெளியிட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.