Categories
மாநில செய்திகள்

#breaking: ஆர்டர்லி முறையை 4மாதங்களில் ஒழிக்க உத்தரவு – ஐகோர்ட் அதிரடி …!!

கடந்த 3ஆண்டுகளாக நிலுவையில் இருந்த இந்த வழக்கில் ஆர்டர்லி முறைக்கு நீதிமன்றம் பலமுறை கண்டனத்தை பதிவு செய்திருந்தது.ஆர்டர்லி முறையை ஒழிக்க கடந்த ஒரு மாத காலமாக தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகளை நீதிமன்றத்ல் தெரிவித்து இருந்தது. அதன்படி மீதமுள்ள ஆர்டர்லியை முழுமையாக ஒழிக்க வேண்டும் என்றும்,

அவர்களுக்கு காவல்துறையில் மாற்றுப் பணி வழங்கப்படும் என்றும்  உத்தரவாதம் அளிக்கப்பட்டது. அதேபோல காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் எஸ்பிக்கள்,  அதிகாரிகள் ஆர்டர்லிகளை பயன்படுத்தவில்லை என்று உத்தரவாதம் அளிப்பதாக  தமிழக டிஜேபி தரப்பில் கடந்த கடந்த வாரம் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

ஆர்டர்லி ஒழிப்பு முறையில் தமிழக அரசு மற்றும் டிஜிபி எடுத்துள்ள நடவடிக்கைக்கு  கடந்த முறை நீதிபதிகள் பாராட்டு தெரிவித்தனர். இந்த வழக்கில் இறுதி உத்தரவு இன்று பிறப்பிக்கப்படும் என்று கடந்த வாரம் நீதிபதி எஸ் எம் சுப்பிரமணியன் அறிவித்திருந்த நிலையில்,  இன்று இந்த வழக்கில் நீதிபதி இறுதி உத்தரவு பிறப்பித்தார்.

அதன்படி 1979 ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட ஆர்டர்லி ஒழிப்பு முறை அரசாணைப்படி நான்கு மாதத்தில் ஆர்டர்லி முறையை நிச்சயமாக ஒழிக்க வேண்டும் என்று தமிழக அரசு மற்றும் டிஜிபிக்கு உத்தரவு பிறப்பித்து இருக்கிறார். ஓய்வு பெற்ற காவல் துறை உயர் அதிகாரிகளிடம்  இருக்கக்கூடிய ஆர்டர்லிகளை உடனடியாக திரும்பப்பெற  வேண்டும் என்றும்,  அதற்கு கால அவகாசம் தெரிவிக்காமல்,  உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.

ஆர்டர்லி பயன்படுத்துவது தொடர்பாக புகார்கள் வந்தால் உடனடியாக விசாரணை நடத்தி சம்மந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் காவல்துறைக்கு உத்தரவு பிறப்பித்து இருக்கிறார். காவல்துறை  உயரதிகாரிகளுக்கு தேவைப்பட்டால் உதவியாளர்கள், அலுவலக உதவியாளர்கள் அல்லது இருப்பிட உதவியாளர்கள் பணிகளை  உருவாக்கி அதன் மூலம் பணியாளர்களை நியமிக்கலாம் என்றும்,  அதற்கான பரிந்துரையை தமிழக டிஜிபி தமிழக அரசுக்கு அனுப்பலாம் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

Categories

Tech |