தேர்தல் வாக்குறுதியில் நெசவுத்தொழிலாளர்களுக்கு 750 யூனிடத்திலிருந்து 1000 யூனிட் இலவச மின்சாரம் என்று சொல்லிவிட்டு, இலவசமும் கொடுக்கவில்லை, ஆனால் இன்றைக்கு அவர்களுடைய மின்சார கட்டணத்தை உயர்த்தி இருக்கிறார்கள். கொடுக்கின்றோம் என்று சொல்லிவிட்டு குறிப்பாக இவர்களுக்கு தொந்தரவை மட்டும்தான் திமுக அரசு கொடுத்திருக்கிறதே தவிர, சொன்ன விஷயங்களை செய்ததாக சரித்திரம் இல்லை.
அதனால் பாரதிய ஜனதா கட்சி மக்களுக்கு தேவையான அவர்களுடைய உரிமையை கட்சி தன்னுடைய கடமையாக செய்வதற்கு பாஜக எப்பவுமே முன்னோடி, அதற்கு மிகப்பெரிய உதாரணம் நம்முடைய பாரத பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள். இன்று தமிழகத்தில் கல்வி என்பது நம் அனைவருக்குமே தெரியும் மிகவும் பாதாள அளவிற்கு சென்று கொண்டிருக்கிறது. குறிப்பாக நம்முடைய தென்னிந்தியாவில் தமிழகம் தான் லேர்னிங் அவுட் கம் ஸ்டேட்டஸ் ஆப் எஜூகேஷனல் கீழே இருக்கிறோம், அதை யாருமே மறக்க முடியாது.
விவரங்கள் தெளிவாக இருக்கிறது. அதை நீங்கள் மேம்படுத்தி கல்வியை இலவசமாக கொடுங்கள், தரமான கல்வி இலவசமாக கொடுங்கள் அதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்.பெயருக்கு மகளிருக்கு இலவசம் என்று சொல்லிவிட்டு இரண்டு பேருந்துக்கு லிப்ஸ்டிக் போட்ட மாதிரி முன்னாடி பெயிண்ட் அடித்து விட்டு, அந்த இரண்டு பேருந்து எப்ப வருகிறது என்று தெரியாது ஆடிக்கு ஒரு பஸ் வருகிறது, அமாவாசைக்கு ஒரு பஸ் வருகிறது.
அந்த பேருந்தில் சகோதரிகள் ஏற வேண்டும் என்றால், காலையில் பெட்ஷீட், தலைவாணி கொண்டு போய் பேருந்து நிலையத்தில் படுத்து விட வேண்டும், எப்போது பஸ் வருகிறது என்று யாருக்குமே தெரியாது. அதை நாங்கள் வெறுக்கின்றோம் . அதை தவறு என்று சொல்கின்றோம். ஒரு வேலையை செய்தால் முழுமையாக செய்ய வேண்டும். இதை வைத்து மாயாஜாலவேலைகளை எல்லாம் விட்டுவிட்டு இந்த அரசு உண்மையாகவே நல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.