Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பொது இடங்களில் போஸ்டர்…. 451 நபர்கள் மீது புகார்…. ரூ. 1.38 லட்சம் அபராதம்… மாநகராட்சி அதிரடி….!!!!

பொது இடங்களில் போஸ்டர் ஒட்டியவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

சென்னை மாவட்டத்தில் பொது இடங்களில் குப்பைகளை கொட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. அதன் பிறகு பொது இடங்களில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் கிழிக்கப்பட்டு, அதற்கு பதிலாக தமிழகத்தின் வரலாற்றின் சிறப்புகளை குறிக்கும் ஓவியங்கள் வரையப்பட்டு வருகிறது. இந்நிலையில் பொது இடங்களில் குப்பைகளை கொட்டியவர்களுக்கு ரூ. 8,89,300 அபராதமும், கட்டுமான கழிவுகளை கொட்டியவர்களுக்கு ரூ. 10,95,410 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று பொது இடங்களில் போஸ்டர் ஒட்டியவர்கள் மீதும் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி பொது இடங்களில் போஸ்டர் ஒட்டிய 451 நபர்களிடம் ரூ. 1,38,100 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பொது இடங்களில் குப்பைகளை கொட்டுவதை தவிர்த்து மாநகராட்சியை தூய்மையாக வைப்பதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் எனவும் மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.

Categories

Tech |