செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஒட்டுமொத்தமாக எங்கள் வளங்களை களவு கொடுத்துவிட்டு, வேடிக்கை பார்த்துட்டு இருக்க முடியாது, எங்களுக்கு நாங்கள் கும்பிடுகின்ற சாமியை விட, வாழுகின்ற பூமி எங்களுக்கு முக்கியமானது. ஒரு பூமி தான் இருக்கிறது, ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு சாமி இருக்கிறது, ஆனால் ஒட்டுமொத்த உலகத்திற்கும் ஒரே பூமி தான் இருக்கிறது.
அந்த பூமியை காப்பாற்ற வேண்டிய பொறுப்பும், கடமையும் என் கட்சிக்காரர்களுக்கு மட்டுமல்ல, ஒவ்வொருவருக்கும் இருக்கிறது.ஆர்ப்பாட்டத்தில் பங்கு பெற்ற மக்களுக்கு மட்டுமல்ல எல்லோருக்குமான கடமை. அதற்காகத்தான் இந்த போராட்டத்தை நாங்கள் செய்கிறோம். ஏற்கனவே இதே கன்னியாகுமரியில் எங்கள் மலைகளை கற்களாக நொறுக்கி கடத்தாதீர்கள் என்று போராடினோம், அதற்கு மதிப்பு ஒன்றுமில்லை.
ஒரு உண்மையிலேயே மண்ணின் மகன் எப்படி தாயின் மாரை அறுக்க பொறுத்துக் கொண்டு இருப்பான் என்று யோசிக்க வேண்டும். இது என் பூமிதானும் மாரை அறுக்கின்ற செயல், அதை தாங்க முடியாமல் தான் தடுக்க வேண்டும் என்று போராட்டம் செய்கிறோம். என் மக்களுக்கு உணர்த்துகிறோம். ஒருவேளை முடியவில்லை, இவர்கள் செய்ய மாட்டார்கள், முடியவில்லை என்றால் அதிகாரத்திற்கு வந்து தடுப்போம்.
பெரும் பெரும் குழிகளாக இருப்பதில் எவனவன் அள்ளி என் மணலை கடத்துகிறார்களோ, அவர்களை தூக்கி போட்டு புதைப்போம். அதை தவிர எங்களுக்கு வேறு வழி கிடையாது. அந்த அதிகாரத்தில் இருப்பவர்கள் இதை கவனம் செய்ய வேண்டும், இன்னொரு தலைமுறை பல தலைமுறை தாண்டி வாழ்வதற்கு வாய்ப்பான பூமியை இதை வைத்து விட்டு போக வேண்டிய பொறுப்பும் கடமையும் இருக்கிறது அதற்காக தான் இந்த போராட்டம்.