Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பொள்ளாச்சி TO பாலக்காடு…. 4 வழிச்சாலை அமைக்கும் பணி மும்முரம்…. அதிகாரி தகவல்….!!!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி மற்றும் பாலக்காடு சாலை வழியே தினசரி 30 ஆயிரத்துக்கும் அதிகமான வாகனங்கள் சென்று வருகிறது. கேரளாவுக்கு லாரி, கனரகவாகனங்கள் அதிகளவு சென்று வருவதால் பாலக்காடு சாலையில் எப்போதும் வாகன போக்குவரத்து காணப்படும். இந்நிலையில் வாகன பெருக்கத்தால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டது. இதனால் இரு வழிச்சாலையை 4 வழிச்சாலையாக மாற்ற திட்டமிடப்பட்டது. இதற்கென ரூபாய்.70 கோடி நிதிஒதுக்கீடு செய்து பணிகள் நடந்து வருகிறது. இந்த சூழ்நிலையில் ஜமீன் முத்தூர் வழியே போகும் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பாலத்தை அகலப்படுத்தும் பணியானது  மும்முரமாக நடந்து வருகிறது. இதற்காக சாலை பணிக்கு இடையூறாகவுள்ள மின் கம்பங்கள் மாற்றியமைக்கப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறியிருப்பதாவது “பொள்ளாச்சி-பாலக்காடு ரோடு இருவழிச்சாலையாக இருக்கிறது. இச்சாலையை பொள்ளாச்சி- கோபாலபுரம் வரை 11.8 கி.மீ தூரத்துக்கு 4 வழிச்சாலையாக மாற்றப்படுகிறது. இந்த பணிகள் ரூபாய் .70 கோடி செலவில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கிடையில் சாலை பணிக்கு இடையூறாகவுள்ள மரங்கள் வெட்டி அகற்றப்பட்டு வருகிறது. அத்துடன் மின் கம்பங்கள், மின்மாற்றிகள் மாற்றியமைக்கப்படுகிறது. தற்போது வரை 60 % பணிகள் நிறைவடைந்து இருக்கிறது. வரும் ஜனவரி மாதம் வரை ஒப்பந்தகாலம் இருக்கிறது. எனினும் அக்டோபர் மாதத்திற்குள் பணிகளை முழுமையாக முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது” என்று அவர்கள் கூறினார்கள்.

Categories

Tech |