Categories
சினிமா

“மேல் முறையீடு செய்து சட்டரீதியாக சந்திக்க இருக்கிறோம்”… டிரைக்டர் லிங்குசாமி….!!!!!

சென்ற 2014 ஆம் வருடம் நடிகர் கார்த்தி, நடிகை சமந்தா போன்றோரது நடிப்பில் “எண்ணி ஏழு நாள்” என்ற படத்தை தயாரிப்பதற்காக, இயக்குனர் லிங்குசாமியின் தயாரிப்பு நிறுவனமான திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் பிவிபி கேப்பிட்டல்ஸ் என்ற நிதி நிறுவனத்திடம் ரூபாய் .1 கோடியே 3 லட்சம் கடன் பெற்றிருந்தது. இக்கடனை திருப்பிக் கொடுக்காமல் அடுத்தடுத்து அவர்கள் பல்வேறு படங்களை தயாரித்ததை அடுத்து, அந்நிறுவனத்துக்கு எதிராக பிவிபி கேப்பிட்டல்ஸ் நிறுவனம் சார்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், பிவிபி நிறுவனத்திடம் பெற்ற ரூபாய்.1 கோடியே 3 லட்சம் கடனை திரும்பச் செலுத்த இயக்குனர் லிங்குசாமிக்கு உத்தரவு பிறப்பித்தது.

இந்த உத்தரவை அடுத்து இயக்குனர் லிங்குசாமி ரூபாய் 1 கோடியே 3 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளை பிவிபி கேப்பிட்டல்ஸ் நிறுனத்துக்கு வழங்கினார். இந்த காசோலைகள் வங்கியில் போதிய பணம் இன்றி திரும்பி வந்ததையடுத்து இயக்குனர் லிங்கு சாமி, அவரது சகோதரர்கள் ஆகியோருக்கு எதிராக அந்த நிறுவனமானது சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் செக்மோசடி வழக்கு தொடர்ந்தது. இவ்வழக்கை விசாரித்த சைதாப்பேட்டை நீதிமன்றம் செக்மோசடி வழக்கில், இயக்குனர் லிங்குசாமிக்கு 6 மாதங்கள் சிறைதண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

இந்த நிலையில் மேல்முறையீடு செய்து சட்ட ரீதியாக சந்திப்போம் என்று இயக்குனர் லிங்கு சாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “இன்று பல்வேறு ஊடகங்களில் பரபரப்பாக வரும் என்னைப் குறித்த ஒரு செய்திக்கு விளக்கம் அளிக்க வேண்டியது என் கடமை ஆகும். இவ்வழக்கு பிவிபி கேப்பிடல் லிமிடெட் மற்றும் தங்களது தயாரிப்பு நிறுவனமான திருப்பதி பிரதர்ஸ் பிலிம் மீடியா பிரைவேட் லிமிடெட் இடையிலானது. அவர்கள் தொடுத்த வழக்கின்மேல் இன்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. நாங்கள் இன்று நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு எதிராக உடனே மேல்முறையீடு செய்து சட்டரீதியாகச் சந்திக்க இருக்கிறோம் எனத் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |