Categories
மாநில செய்திகள்

BREAKING : குரூப் 2ஏ முறைகேடு – மேலும் ஒருவர் கைது …!!

குரூப் 2 ஏ தேர்வு முறைகேட்டு வழக்கில் மேலும் ஒருவரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர்.

குரூப் 4 , குரூப் 2 ஏ ,  விஏஓ தேர்வு முறைகேட்டு வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த வழக்கில் இதுவரை 43 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர். இதில் முக்கிய குற்றவாளியாக இருக்கும் ஜெயக்குமாரின் போலீஸ் காவல் இன்றுடன் நிறைவடைகிறது. இன்று மாலை அவர் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார். இதற்கிடையில் ஜெயக்குமார்  அளித்த தகவலின் அடிப்படையில் குரூப் 2 ஏ தேர்வு முறைகேட்டில் ஈடுபட்ட மேலும் ஒருவரை சிபிசிஐடி போலீசார் கைது செய்யப்படுகிறார்கள்.இதோடு குரூப் 2ஏ தேர்வு முறைகேடு தொடர்பாக கைதுசெய்யப்பட்டோரின் எண்ணிக்கை 20ஆக உயர்ந்துள்ளது.

கைதானவரிடம் வாக்குமூலம் பெறக்கூடிய பணி நடந்துகொண்டிருக்கிறது. அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் நடவடிக்கையில் சிபிசிஐடி போலீசார் ஈடுபட்டு வருகின்றார்கள். இதற்கிடையில் இந்த வழக்கு தொடர்பாக ஜெயகுமாரிடம் இருந்து 2 கார் , பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக சிபிசிஐடி போலீசார் தெரிவித்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் ஜெயக்குமாரிடம் பெற்ற வாக்கு மூலத்தை வைத்து  தலைமறைவாக கூடியவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கையை துரிதப்படுத்தியுள்ளதாக சிபிசிஐடி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |