Categories
உலக செய்திகள்

கொரோனா கட்டுப்பாடுகளால்… நாடு திரும்ப முடியாத இந்திய மாணவர்கள்…. விசா வழங்க முன்வந்த சீனா…!!!

சீன அரசு, தங்கள் நாட்டில் கல்வியை தொடர விரும்பும் இந்திய நாட்டை சேர்ந்த மாணவர்களுக்கு மீண்டும் விசா அளிக்க தீர்மானித்திருக்கிறது.

இந்தியாவைச் சேர்ந்த சுமார் 23,000 மாணவர்கள் சீனாவில் தங்கி மருத்துவம் போன்ற கல்விகளை பயின்று வந்த நிலையில், கொரோனாவின் முதல் அலையின் போது சொந்த நாட்டிற்கு திரும்பினார்கள். கொரோனா பரவலுக்கு எதிராக விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளால் அவர்கள் கல்வியை தொடர மீண்டும் சீன நாட்டிற்கு செல்ல முடியாமல் போனது.

இந்நிலையில் சுமார் இரண்டு வருடங்கள் கழித்து, சீன அரசு தங்கள் நாட்டில் கல்வியை தொடர விரும்பும் இந்திய நாட்டை சேர்ந்த மாணவர்களுக்கு விசா அளிக்க தீர்மானித்திருக்கிறது. இந்தியாவை சேர்ந்த மாணவர்களை தங்கள் நாட்டிற்கு வரவேற்பதாக சீன வெளியுறவு அமைச்சக ஆசிய விவகாரங்கள் துறைக்கான ஆலோசகராக இருக்கும் ஜி ரோங் தெரிவித்திருக்கிறார்.

அதன்படி, சீனாவில் படித்துக் கொண்டிருந்த இந்திய மாணவர்கள் மட்டுமல்லாமல் புதிதாக படிக்க விரும்பும் மாணவர்கள், இந்திய நாட்டை சேர்ந்த தொழிலதிபர்கள், சீனாவில் வேலை செய்யும் குடும்பத்தினர் போன்றோருக்கும் விசா அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |