பெண்கள் கடந்த 19-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாக்குரிமைக்காக போராடினர். அமெரிக்காவில் 19-ஆவது சட்ட திருத்தம் படி 1920-ஆம் ஆண்டு பெண்கள் அனைவரும் வாக்களிக்க உரிமை வழங்கப்பட்டது. பெண்கள் சமத்துவ தினம் பெண்ணுரிமை ஆர்வலர்களின் சாதனைகளை கொண்டாடுகிறது. மேலும் பெண்கள் வாழ்க்கையில் எதிர்கொள்ளும் தனித்துவமான போராட்டங்களை பெண்கள் சமத்துவ தினம் நமக்கு நினைவுபடுத்துகிறது. பெண்களுக்கு கல்வியின் மூலமாக அதிகாரம் அளிக்க வேண்டும். அவர்களது வலுவான எதிர்காலத்திற்கான அடித்தளத்தை உருவாக்க பெண்களுக்கு நிதி தேவைப்படுகிறது.
ராணுவத்தில் பணிபுரியும் பெண்களை பற்றிய சில உண்மைகளை நாம் பார்ப்போம்.
மருத்துவ மற்றும் செயல்பாட்டு நிலைகளில் அமெரிக்க ராணுவத்தில் பெண்கள் நீண்ட காலமாக முக்கிய பங்கு வகிக்கின்றனர். பெண்களுக்கு கடந்த 2013-ஆம் ஆண்டு அமெரிக்காவில் போர் முனைகள் திறக்கப்பட்டன.
கடந்த 1,700 மற்றும் 1800ஆம் ஆண்டுகளில் உள்நாட்டு போரின் போது பெண்கள் சிலர் ஆண்களைப் போல மாறுவேடமிட்டு ராணுவத்தில் சேர்ந்தது குறிப்பிடத்தக்கதாகும்.
டாக்டர் மேரி எட்வர்ட்ஸ் வாக்கர் என்பவர் யூனியனுக்கான ஒப்பந்த அறுவை சிகிச்சை நிபுணர் ஆவார். இவர் கான்பெடரேட் போர்க் கைதியாக காலத்தை கழித்துள்ளார். மேரியின் பல்வேறு முயற்சிகளை பாராட்டி அவருக்கு பதக்கம் வழங்கப்பட்டது. இன்று வரை ராணுவத்தின் உயரிய விருதை பெற்ற ஒரே பெண்மணி மேரி வாக்கர் தான் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இரண்டாம் உலகப் போரின் போது பெண்களின் பங்கு முக்கியம் வாய்ந்ததாக இருந்தது. 4 லட்சத்திற்கும் மேற்பட்ட பெண்கள் (செவிலியர்கள், விமானிகள், ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள்) இரண்டாம் உலக போரின் போது சிறப்பாக பணியாற்றியுள்ளனர்.
அமெரிக்கா ராணுவத்தில் வேலை பார்க்கும் பெண்கள் கர்ப்பமாகிவிட்டால் அவர்கள் தொடர்ந்து பணியாற்ற அனுமதிக்கப்படுவதில்லை. ஆனால் இன்று ராணுவத்தின் அனைத்து கிளைகளிலும் வேலை பார்க்கும் பெண்களுக்கு மகப்பேறு உடைகள் வழங்கப்படுகிறது.