Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“வயல் வரப்புகள் வழியாக செல்கிறோம்” மாணவ- மாணவிகளோடு மனு அளித்த கிராம மக்கள்…. பரபரப்பு…!!

பாதை வசதி ஏற்படுத்தி தர வலியுறுத்தி கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் நல்லூர் மேற்குகளம் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பள்ளி மாணவ- மாணவிகளுடன் சென்று மனு அளித்துள்ளனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, நல்லூர் மேற்குளம் பகுதியில் 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். பல ஆண்டுகளாக நாங்கள் பயன்படுத்தி வந்த பாதையை அடைத்து விட்டனர்.

இதனால் மருத்துவமனை செல்லும் கர்ப்பிணிகள், நோயாளிகளும், பள்ளி செல்லும் மாணவர்களும், வேலைக்கு செல்பவர்களும் வயல் வரப்புகள் வழியாக நடந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே பாதை வசதி ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.

Categories

Tech |