டிக் டாக் பிரபலமும் பாஜக நிர்வாகியுமான சோனாலி போகத் கோவாவில் மாரடைப்பால் உயிரிழந்தார். 2006ம் ஆண்டு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று பிரபலம் அடைந்த சோனாலி போகத் பின் டிக் டாக் மூலம் மேலும் பிரபலம் அடைந்தார். 2020ம் ஆண்டு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவர் அரியானா சட்டமன்ற தேர்தலில் அதம்பூர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு இருந்தார். ஆனால் அதில் அவர் வெற்றி பெறவில்லை.
தேர்தலில் வென்று எம்எல்ஏவான குல்தீப் பிஷ்ணோய் சமீபத்தில் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகியதோடு எம்.எல்.ஏ பதவியையும் ராஜினாமா செய்தார். இந்நிலையில் ஆதம்பூர் இடைத் தேர்தலில் பாஜக சார்பில் மீண்டும் சோனாலியை நிறுத்துவது பற்றி ஆலோசிக்கப்பட்டு வந்த நிலையில் கோவா சென்றிருந்த சோனாலி மாரடைப்பால் மரணமடைந்துள்ளார். உயிரிழப்பதற்கு 2 மணி நேரத்திற்கு முன்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் சோனாலி போகத் தனது படத்தையும் பகிர்ந்துள்ளார். சோனாலியின் அகால மரணம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.