Categories
உலக செய்திகள்

“பணியாளர்கள் மீது அக்கறை காட்டும் பிரித்தானியர்”… ஹீரோ என வர்ணிக்கும் பிரித்தானிய ஊடகங்கள்….!!!!!

மக்கள் பலர் விலைவாசி உயர்வை சமாளிப்பதற்காக தடுமாறி வருகின்ற நிலையில் தன்னிடம் பணியாற்றும் அனைத்து பணியாளர்களுக்கும் திடீர் ஊதிய உயர்வு ஒன்றை பிரத்தானியர் ஒருவர் அறிவித்திருக்கிறார். 4 com என்னும் தொலைபேசி நிறுவனத்தின் உரிமையாளரான Daron hutt ஏற்கனவே மின்சாரம், எரிவாயு போன்ற விஷயங்களில் விலை உயர்ந்துள்ள நிலையில் வரும் குளிர் காலத்தில் அவை மேலும் அதிகரிக்க கூடும் என எதிர்பார்க்கப்படுவதனால் தன்னிடம் பணியாற்றும் அனைவருக்கும் ஊதிய உயர்வழிக்க முடிவு செய்திருப்பதாக கூறியுள்ளார்.

மேலும் இவரிடம்  431 பணியாளர்கள் பணியாற்றி வருகின்ற நிலையில் அவர் ஆளுக்கு 200 பவுண்டுகள் ஊதிய உயர்வு அளிக்க முடிவு செய்து இருக்கின்றார். அதுவும் உடனடியாக அமலுக்கு வரும் இந்த ஊதிய உயர்வு இந்த மாதத்திற்கு மட்டுமல்லாமல் அடுத்த அறிவிப்பு வெளியாகும் வரை இந்த 200 பவுண்டுகள் தொடர்ந்து வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். மேலும் தனது தொழில் நன்கு வளர்ச்சி அடைந்திருக்கிறது எனக் கூறியவர் விலைவாசி உயர்வால் பாதிக்கப்பட்டிருக்கின்ற தனது பணியாளர்களுக்கு உதவும் நிலையில் தனது நிறுவனம் இருக்கிறது எனவும் கூறியுள்ளார். இந்த இக்கட்டான சூழலில் தனது பணியாளர்கள் மீது அக்கறை காட்டும் மிஸ்டர் ஹட்டை பிரிட்டானிய ஊடகங்கள் ஹீரோ என வர்ணித்து வருகின்றனர்.

Categories

Tech |