Categories
உலகசெய்திகள்

“உயிரிழக்கும் முன் தன்னிடம் பேசிய டயானா”… தீயணைப்பு வீரர் கூறும் பரபரப்பு தகவல்…!!!!!!

உயிர் இழக்கும் முன் தான் டயானா விடம் பேசியதாக தீயணைப்பு ஒருவர் கூறிய தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

1997 ஆம் வருடம் ஆகஸ்ட் மாதம் 31ஆம் தேதி  பாரிசில் உள்ள சுரங்கப்பாதை ஒன்றில் நடைபெற்ற விபத்தில் பிரித்தானிய இளவரசி டயானா சிக்கியுள்ளார். இந்த விபத்தில் அவர் உயிரிழந்து விட்டதாக தான் இதுவரை செய்திகள் கூறியுள்ளன. ஆனால் தான் டயானாவை உயிருடன் சந்தித்ததாக கூறியுள்ளார் தீயணைப்பு வீரர் ஒருவர். விபத்து நடந்த இடத்திற்கு முதலில் வந்தவர்களில் தீயணைப்பு வீரரான Xavier gourmelon ஒருவர் ஏதோ ஒரு விபத்து யாரோ ஒரு பெண் விபத்தில் காயமடைந்திருக்கிறார். எனவே இவருக்கு  விபத்தில் சிக்கியது இளவரசி என்பது தெரியாது. இந்த நிலையில் படுகாயம் அடைந்து காருக்குள் சிக்கி இருந்த டயானாவை மெல்ல மெல்ல வெளியே எடுத்த சேவியரிடம் கடவுளே என்ன நடந்தது என கேட்டாராம் டயானா.

சிறிது நேரத்தில் டயானாவிற்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. உடனே தான் பிரபலமான ஒருவருக்கு உயிர் காக்கும் சிகிச்சை அளிக்கின்றோம் என்பதெல்லாம் தெரியாத சேவியர் அவருக்கு உயிர் காக்கும் சிகிச்சை அளித்துள்ளார். மேலும் அவர் டயானாவிற்கு இதய மசாஜ் அளிக்க சில வினாடிகளுக்கு பின் சுவாசிக்க தொடங்கியுள்ளார்.  டயானாவை ஆம்புலன்ஸில் அனுப்பும்போது அவருக்கு உயிர் இருந்தது. மேலும் அவர் உயிர் பிழைத்துக் கொள்வார் என்று தான் நினைத்தேன். ஆனால் மருத்துவமனையில் அவர் இறந்து விட்டதாக அதன் பின் கேள்விப்பட்டபோது நான் மிகவும் அப்செட் ஆகி விட்டேன் என கூறியுள்ளார் சேவியர்.

இந்த நிலையில் அவருக்கு உள் காயங்கள் இருந்ததை அறிவேன் என கூறும் சேவியர் ஆனால் அங்கு நடந்த எதுவும் எனக்கு மறக்கவில்லை அந்த நினைவுகள் எப்போதுமே என்னுடன் இருக்கும் என தெரிவித்துள்ளார். அவர் இளவரசி டயானா என்பது எனக்கு தெரியாது எனக் கூறும் போது அவர் ஆம்புலன்ஸ் ஏற்றப்பட்ட பிறகுதான் மருத்துவ உதவி குழுவினரில் ஒருவர் அது இளவரசி டயானா என தன்னிடம் கூறியதாக தெரிவித்துள்ளார். வாழும் போதே நேர்மறை மற்றும் எதிர்மறை என பல்வேறு காரணங்களுக்காக உலகின் கவனம் ஈர்த்தவர் டயானா. மேலும் அவரது இறப்பிற்கு பின் அவர் பற்றிய தகவல்கள் புதிது புதிதாக வெளியாக இன்னும் கவனம் ஈர்த்துக் கொண்டுள்ளது.

Categories

Tech |