Categories
உலக செய்திகள்

பெண்களே ஜாக்கிரதை…. இந்தியப்பெண்ணுக்கு லண்டனில் நேர்ந்த நிலை…!!!

லண்டனில் வசிக்கும் இந்திய பெண் ஒருவர் திரையரங்கில் பெண்களால் கடுமையாக தாக்கப்பட்டு உடைமைகளை இழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவை சேர்ந்த 48 வயதுடைய உஷா சர்மா லண்டனில் வசிக்கிறார். இவர், பல விருதுகள் பெற்ற திரைப்பட இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். இந்நிலையில் இவர் லண்டனில் இருக்கும்  Vue cinema திரையரங்கிற்கு படம் பார்க்க சென்றிருக்கிறார். அப்போது, இடைவேளையில் அவர் கழிவறைக்கு சென்ற போது, திடீரென்று அவரை சுற்றி வளைத்த பெண்கள் சிலர், அவரின் கைகளை மடக்கி பிடித்து, அவர் வைத்திருந்த பணம், கிரெடிட் கார்டு, ஓட்டுனர் உரிமம் போன்றவற்றை எடுத்துக்கொண்டனர்.

உடனே, அவர் தன் போனை எடுத்தவுடன் அவரை பலமாக அடித்து போனையும் பிடுங்கிக் கொண்டு தப்பியுள்ளனர். அவர் உதவி கேட்டு கத்தியிருக்கிறார். எனினும், ஒருவர் கூட வரவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல், திரையரங்கின் பாதுகாவலர்கள் அங்கு தான் இருந்திருக்கிறார்கள்.

அவர்களின் முன்பு உஷா அணிந்திருந்த கைக்கடிகாரத்தை பறிக்க ஒரு பெண் முயற்சித்திருக்கிறார். அவர் உதவி கேட்டு கதறியும் பாதுகாவலர்கள் உதவவில்லை. உடல் முழுக்க காயமடைந்து உஷா வெளியே வந்திருக்கிறார். அதன் பின்பு அருகே நின்ற ஒரு பெண்ணிடம் போனை வாங்கி அவசர உதவிக்கு தொடர்பு கொண்டிருக்கிறார்.

இந்த சம்பவத்தால் தான் மனதளவில் பாதிக்கப்பட்டதாக கூறியிருக்கிறார். தன்னால் நிம்மதியாக சாப்பிட மற்றும் உறங்க முடியவில்லை என்று தெரிவித்திருக்கிறார். காவல்துறையினர் இது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். எனினும் தற்போது வரை யாரும் கைதாகவில்லை.

Categories

Tech |