Categories
மாநில செய்திகள்

மின் கட்டண உயர்வில் எந்தவித மாற்றமும் இல்லை….. அமைச்சர் திட்டவட்டம்….!!!!!

கோவையில் தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தமிழகத்தில் மின்கட்டண உயர்வு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, “சிறு, குறு நிறுவனங்களுக்கான மின்கட்டண உயர்வு குறைப்பது பற்றி மட்டுமே பரிசீலிக்கப்படும். மின் கட்டண உயர்வு குறித்து பல்வேறு நிறுவனங்களிடம் பரிசீலிக்கப்பட்டது.

உயர்த்தப்பட்ட மின் கட்டணங்களை குறைக்குமாறு பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர் அது விரைவில் பரிசீலிக்கப்படும். வீடுகளுக்கு திட்டமிடப்பட்டுள்ள மின் கட்டண உயர்வில் எந்தவித மாற்றமும் இல்லை. மற்ற மின் கட்டண உயர்வில் எவ்விதமான மாற்றமும் இல்லை”எனத் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |