Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் விக்ரமை பார்க்க குவிந்த கூட்டம்….. ரசிகர்களை அடித்து விரட்டியதால் பரபரப்பு….!!!

பிரபலமான நடிகரை பார்ப்பதற்காக ரசிகர்கள் கூட்டம் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக விக்ரம் வலம் வருகிறார். இவர் தற்போது அஜய் ஞானமுத்து இயக்கத்தில் கோப்ரா என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் ஸ்ரீநிதி செட்டி, இர்பான் பதான் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படம் வருகிற ஆகஸ்ட் 31-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப் பட்டுள்ளது. இந்த படத்தின் அறிமுக நிகழ்ச்சி திருச்சியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக விக்ரம் உட்பட 9 பேர் திருச்சிக்கு வந்தனர். இந்நிலையில் நடிகர் விக்ரமை பார்ப்பதற்காக விமான நிலையத்தில் அதிக அளவில் ரசிகர்கள் கூட்டம் குவிந்தது. இதன் காரணமாக பாதுகாப்பு பணிக்காக போலீசார் குவிந்தனர்.

ஆனால் போலீஸ் பாதுகாப்பையும் மீறி ரசிகர்கள் விக்ரமிடம் நெருங்கியதால் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் ரசிகர்களை அடித்து விரட்டினர். இதனால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் வீரர்கள் விக்ரமை பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர்.

/

Categories

Tech |