விருதுநகர் மாவட்டம், அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலில் இளநிலை உதவியாளர் (2), வழக்கு எழுத்தர் (1), வசூல் எழுத்தர் (1), சீட்டு விற்பனையாளர் (1), அலுவலக உதவியாளர் (1), உபகாவல் (12), துப்புரவாளர் (27), மேளம் செட் (1), நந்தவனம் (1), உபகோவில் பாரா (1), பண்டக காப்பாளர் (1), மேற்பார்வையாளர் (1), ஓதுவார் (1), நாதஸ்வரம் (1), திருவிளக்கு (1), உதவி சுயம்பாகம் (1), வரைவாளர் (1), பிளம்பர் (1), உதவி மின் பணியாளர் (1) ஆகிய பணிகளுக்கு என மொத்தமாக 57 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
TNHRCE Viruthunagar ஊதிய விவரம்:
குறைந்தபட்சம் ரூ.10,000/- முதல் அதிகபட்சம் ரூ.65,500/- வரை இந்த அறநிலை துறை பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படும் பணியாளர்களுக்கு மாத ஊதியமாக கொடுக்கப்படும்.
அறநிலையத்துறை கல்வி விவரம்:
விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் பணிக்கு ஏற்ப அரசு அல்லது அங்கீகாரம் பெற்ற பள்ளி அல்லது கல்வி நிலையங்களில் பின்வரும் கல்வி தகுதியை பெற்றவராக இருக்க வேண்டும்.
அலுவலக உதவியாளர் – 8 ஆம் வகுப்பு
இளநிலை உதவியாளர், வழக்கு எழுத்தர், வசூல் எழுத்தர், சீட்டு விற்பனையாளர், பண்டக காப்பாளர் – 10ஆம் வகுப்பு
பிளம்பர், உதவி மின் பணியாளர் – ITI
வரைவளர் – BE / B.Tech
மற்ற பணிகளுக்கு – தமிழில் எழுத / படிக்க
TNHRCE Viruthunagar வயது விவரம்:
இந்த அறநிலையத்துறை பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு, 01.07.2022 அன்றைய தினத்தின் படி, குறைந்தபட்சம் 18 வயது எனவும் அதிகபட்சம் 35 வயது எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
அறநிலையத்துறை தேர்வு செய்யும் முறை:
நேர்காணல் மூலம் செய்முறை தேர்வு மூலம் இப்பணிகளுக்கு தகுதி உள்ள நபர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
TNHRCE Viruthunagar விண்ணப்பிக்கும் வழிமுறை:
விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகலை இணைத்து கீழே குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தபால் செய்ய வேண்டும். 05.09.2022 அன்று வரை இப்பணிக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் தரப்பட்டுள்ளது.
தபால் செய்ய வேண்டிய முகவரி;
உதவி ஆணையர் / செயல் அலுவலர்,
அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில்,
இருக்கண்குடி, சாத்தூர் வட்டம்,
விருதுநகர் – 626 202.
https://drive.google.com/file/d/1xDUaFbvQhAjTJ1b80T6XxZ16iRu4Gp7u/view