Categories
தேசிய செய்திகள்

அகவிலைப்படி உயர்வு… தனியார் பணியாளர்களின் ஆதங்கத்தை கருத்தில் கொள்ளுமா தமிழக அரசு…?

அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கருத்தில் கொண்டு மத்திய மாநில அரசு ஊழியர்களுக்கு வருடத்திற்கு இருமுறை அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டு வருகின்றது. இதன்படி ஆகஸ்ட் 15ஆம் தேதி நாட்டின் 75வது சுதந்திர தின கொண்டாட்டத்தின் போது தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஏற்கனவே இனிப்பான செய்தியாக இருக்கட்டும் என அகவிலை படி உயர்வு மூன்று சதவீதம் அதிகரிக்கப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். முதல்வரின் இந்த அறிவிப்பை அடுத்து அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 31 சதவீதமாக இருந்து வந்த டிஏ 34 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

அரசு ஊழியர்கள் ஆசிரியர்களை தொடர்ந்து அரசு துறைகளில் பணியாற்றும் ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் போன்ற உயர் அதிகாரிகளுக்கும் அகவிலைப்படி உயர்வு 3 சதவீதம் உயர்த்தப்படுவதாக தமிழக அரசு தற்போது அறிவித்திருக்கின்றது. இந்த டிஏ உயர்வானது ஜூலை ஒன்றாம் தேதி முதல் கணக்கில் கொள்ளப்படும் எனவும் கூறியுள்ளது. ஆனால் இன்றைய கார்ப்பரேட் யுகத்தில் அரசு துறைகளை ஒப்பிட்டு பார்க்கும்போது தனியார் நிறுவனங்களை அதிக வேலை வாய்ப்புகளை வழங்குபவையாக இருக்கிறது. இதன் பயனாக எண்ணிக்கையின் அடிப்படையில் அரசு ஊழியர்களை விட தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களின் பணியாளர்களை அதிகமாக இருந்து வருகின்ற நிலையில் இவர்களுக்கும் அரசு ஊழியர்களைப் போல் அகவிலை படி கிடைக்க பெற அரசு ஆவணம் செய்யுமா என்ற கேள்வி எழுந்திருக்கின்றது. 3 %, 4% என ஒற்றை இலக்கை விதத்தில் அறிவிக்கப்படும் அகவிலைப்படி உயர்வு என்பது தங்களது அடிப்படை ஊதியத்தில் தான் கணக்கிட்பட்டு தரப்படுகின்றது.

ஆனால் பெரும்பாலான தனியார் நிறுவன ஊழியர்களுக்கு வருடத்திற்கு ஒருமுறை வழங்கப்படும் ஊதிய உயர்வு அவர்களின் மொத்த ஊதியத்தை அடிப்படையாகக் கொண்டு வழங்கப்படுகின்றது. இந்த நுட்பமான வேறுபாட்டை கருத்தில் கொள்ளாமல் டி ஏ உயர்வு தீபாவளி, பொங்கல் போனஸ் அது இதுவென தங்களுக்கு எப்போது பார்த்தாலும் அரசு சலுகைகளை வாரி வழங்கி வருவதாக தவறான கண்ணோட்டம் பொதுமக்கள் மத்தியில் இருந்து கொண்டிருக்கிறது. தங்களை காரணம் காட்டி தனியார் நிறுவன ஊழியர்களும் அகவிலைப்படி உயர்வு கேட்பது முறையல்ல என அரசு ஊழியர்கள் கூறி வருகின்றார்கள். மாதாந்திர டார்கெட் காலனி பணி மதிப்பீடு போன்ற பல்வேறு காரணங்களை அடிப்படையாகக் கொண்டுதான் தங்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்படுகின்றது.

மேலும் கொரோனா பேரிடர் போன்ற காலகட்டங்களில் நிறுவனத்தின் ஆண்டு வருவாய் குறைந்ததாலே வணிகம் பாதிக்கப்பட்டதாலோ அந்த வருட ஊதிய உயர்வு கூட தங்களுக்கு வழங்கப்படாமல் போவதும் உண்டு. ஆனால் அரசு ஊழியர்களுக்கு அப்படி இல்லை அரசு எவ்வளவு நிதி நெருக்கடியில் இருந்தாலும் டிஏ போனஸ் போன்ற பண பலன்கள் அவர்களுக்கு பெரும்பாலான நேரங்களில் கொடுக்கத்தான் செய்யப்படுகின்றது. மேலும் விலைவாசி உயர்வு அனைவருக்கும் பொதுவாக இருக்கும்போது ப்ரொபஷனல் டாக்ஸ், இன்கம் டேக்ஸ் என அரசுக்கு வரிகளை கட்டுப்படுத்தும் தங்களுக்கும் டி ஏ கிடைக்கப்பெற அரசு ஆவணம் செய்ய வேண்டும் என தனியார் பணியாளர்கள் ஆதங்கப்படுகின்றார்கள்.

Categories

Tech |