Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

மகள்களுடன் வாய்க்காலில் குதித்த தாய்…. தற்கொலைக்கு தூண்டியதாக கணவர் கைது…. போலீஸ் விசாரணை…!!

மனைவியை தற்கொலைக்கு தூண்டியதாக ஐடி நிறுவன ஊழியரை போலீசார் கைது செய்தனர்.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள கரட்டுப்பாளையம் பகுதியில் தீபக் என்பவர் வசித்து வருகிறார். பெங்களூரில் இருக்கும் ஐ.டி.நிறுவனத்தில் வேலை பார்க்கும் தீபக் கடந்த 2 ஆண்டுகளாக வீட்டில் இருந்தே பணிபுரிந்து வருகிறார். இவருக்கு விஜயலட்சுமி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு மது நிஷா(12), தருணிகா(6) என்ற இரண்டு மகள்கள் இருந்துள்ளனர்.இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக விஜயலட்சுமி தனது இரண்டு மகள்களுடன் வாய்க்காலில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மரக்கிளையில் தொங்கியபடி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த மது நிஷாவை மீட்டனர்.

பின்னர் நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு விஜயலட்சுமியின் சடலத்தை மீட்டனர். தருணிகா என்ன ஆனார் என்பது தெரியவில்லை. இந்நிலையில் விஜயலட்சுமியின் தாயார் கடத்தூர் காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார். அந்த புகாரில் தீபக் எங்களிடம் கேட்ட 15 லட்சம் ரூபாய் பணத்தை கொடுத்தோம். ஆனால் சொத்துக்களை எழுதித் தருமாறு தீபக் வற்புறுத்தியதால் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் எனது மகள் தற்கொலை செய்து கொண்டார் என குறிப்பிட்டுள்ளார். அந்த புகாரின் பேரில் தற்கொலைக்கு தூண்டியதாக தீபக் மீது வழக்குப்பதிந்த போலீசார் அவரை கைது செய்தனர்.

Categories

Tech |