Categories
மாநில செய்திகள்

குறையும் மின்கட்டணம்….. இவர்களுக்கு மட்டும்….. அமைச்சர் அதிரடி அறிவிப்பு….!!!!

கோவை ஈச்சனாரியில் நாளை நடைபெற உள்ள அரசு விழாவில் முதல்வர் மு க ஸ்டாலின் பங்கேற்க உள்ளார். இதனால் அங்கு அமைக்கப்பட்டு வரும் மேடை, பந்தல் பணிகளை அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று நேரில் பார்வையிட்டார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது: ”  மின்சாரத் துறையில் ஏற்பட்டுள்ள இழப்புகளால் மின் கட்டணம் உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

மின் கட்டண உயர்வு குறித்து சிறுகுறு தொழில் முனைவோர் கோரிக்கை முன் வைத்துள்ளனர். அதனால் சிறு, குறு நிறுவனங்களுக்கான மின்கட்டண உயர்வை குறைப்பது பற்றி மட்டும் விரைவில் பரிசீலிக்கப்படும். வீடுகளுக்கு திட்டமிடப்பட்டுள்ள மின் கட்டண உயர்வில் எந்தவித மாற்றமும் இல்லை. மற்ற மின் கட்டண உயர்விலும் எவ்விதமான மாற்றமும் இல்லை”எனத் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |