செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தற்போது நிலைமைக்கு என்ன செய்ய வேண்டும் ? நீங்கள் சீராக அள்ளுங்கள் என்று சொல்கிறோம். தனியார் முதலாளிகளுக்கு கொடுத்தால் அவர்களுக்கான லாபத் தேவைக்கு மண்ணை மூன்று அடியை 30 அடி 40 அடி என்று விற்று விடுகிறார்கள்.
நீங்கள் சீராக கொண்டு போயிருந்தால் நான் சொல்வது தான் 300 ஆண்டுகள், 400 ஆண்டுகளுக்கு அந்த மணலை கொண்டு போய் இருக்கலாம். அடுத்த மெதுவாக மெதுவா ஆற்றல் படிந்த, அந்த மணல் வளர்ந்து இருக்கும், இப்போது எங்கிருந்து அருவி வந்தது, ஆறு வந்தது, ஆற்றில் எங்கிருந்து காற்றுக்கு மேல் மணல் வந்தது.
இப்போது அந்த மலையை நீங்கள் குடைகிறீர்கள், மலையை முடித்து விட்டால், அருவி எங்கிருந்து வரும் ? ஆறு எங்கிருந்து வரும் ? ஆற்றில் மணல் எங்கிருந்து வரும் ? அந்த கேள்விக்கு பதில் சொல்ல மாட்டேங்கிறீர்கள். கட்டுமான தொழில் மலை, மணலை நம்பி தான் காத்திருக்கிறீர்களா? ஸ்டாலின் அவர்களிடம் கேளுங்கள் என்ன செய்யலாம் என்று ? என்னிடம் ஏன் கேட்கிறீர்கள்.
நீங்கள் மலையை குடைந்து கொண்டு மணல் ஆக்குவதை எப்படி சகித்துக் கொள்ள முடியும், மாற்று வழி குளிப்பாறைகளை எடுங்கள், என் மண்ணின் மக்களுக்கு மட்டும் எடுங்கள். நீங்கள் விளிங்கத்தில் துறைமுகம் கட்டுவதற்கு, அதானிக்கு கொடுக்க வேண்டும் என்றால்… கேரளாவில் இருக்கின்ற ஆற்று மணல் அள்ளப்படுகிறதா? கேரளாவில் பாலாற்று மணல் விற்கப்படுகிறது என்று எழுதி இருக்கா இல்லையா? கேரளாவில் மேற்கு தொடர்ச்சி மலை இருக்கிறது. ஏன் அவர்கள் மழையை தொடவில்லை, அப்போது அவர்களுக்கு இருக்கின்ற அக்கறை ஏன் நம்மிடம் இல்லை என சீமான் கேள்வி எழுப்பினர்.