விசா இல்லாமல் தங்கி இருந்த 2 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள பெருந்துறை பணிக்கம்பாளையம் பகுதியில் வாடகைக்கு வீடு பிடித்து வங்காளதேசத்தை சேர்ந்த சிலர் விசா இல்லாமல் தங்கி வேலை பார்த்து வருவதாக போலீசருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனை நடத்தினர். அப்போது ஒரு வீட்டில் வங்காளதேசத்தை சேர்ந்த சம்ஜியுமான் சர்தார்(39), முகமது அலாவுதீன் காஜி(27) ஆகியோர் விசா இல்லாமல் தங்கி இருந்து தொழிலாளர்களாக வேலை பார்த்து வந்தது தெரியவந்தது. எனவே அனுமதி இன்றி இந்தியாவில் தங்கி இருந்ததாக கூறி 2 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிந்து அவர்களை கைது செய்தனர். பின்னர் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.