Categories
அரசியல் மாநில செய்திகள்

10வருஷமா போராடுறேன்…! நீங்க கவனிக்கலையா ? அப்படினா…. இது உங்க தப்பு தான் …. சீமான் ஆவேசம்!

செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை  ஒருங்கிணைப்பாளர் சீமான், இப்போது என்னிடம் அதிகாரம் இல்லை, நான் என்ன செய்ய முடியும் என்று சொல்லுங்கள் ? போராடுவதை தவிர வேறு வழி இருக்கா சொல்லுங்க. 10 வருடமாக நாங்கள் போராடியதை நீங்கள் ஏன் பார்க்கவில்லை? 10 வருடமாக நான் போராடியதை பார்க்காமல் நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?

இங்கே இதற்கு முன்னாடி போராடி இருக்கேன், கட்சி தொடங்கின காலத்தில் இருந்து போராடிக் கொண்டிருக்கிறேன், நீங்கள் கவனிக்கவில்லை, அப்போது இருந்தே நாங்கள் போராடிக் கொண்டிருக்கிறோம்.திருநெல்வேலியில், தர்மபுரியில், கிருஷ்ணகிரியில் போராடி இருக்கிறோம். எல்லா இடங்களிலும் மணல் கொள்ளை, மலையை நோக்கி மணல் அள்ளுவதற்கு எதிராக போராடிக் கொண்டிருக்கிறோம்.

ஆற்று மணலை அள்ளுவதில் இருந்து போராடியிருக்கிறோம். ஆற்று மணல் தீர்ந்த பிறகு மலையை குடையும்போது மலை,  மணலை அள்ளாதீர்கள்  என்று போராடுகிறோம். நீங்கள் கவனிக்கவில்லை என்றால் அது உங்கள் தவறு, உங்கள் ஆட்சி இருப்பதால் மணல் கொள்ளை குறைகிறதா ? இப்போது கன்னியாகுமரியில் இருந்து  கற்களாக நொறுக்கி விளிங்கத்திற்கு கொண்டு போகப்படுகிறதா? இல்லையா? உங்கள் ஆட்சியில் குறைந்துவிட்டது என்கிறீர்கள் அதுதானே சொல்ல வருகிறீர்கள் என தெரிவித்தார்.

Categories

Tech |