Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

பேருந்து நிலையத்தில் காத்திருந்த பயணிகள்….. வாலிபரின் வெறிச்செயல்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

பயணிகளிடம் அவதூறாக பேசிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள டவுன் பேருந்து நிலையம் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து  பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு மது போதையில் வந்த ஒரு வாலிபர் பயணிகளிடம் அவதூறாக பேசி தகராறு செய்துள்ளார். இதுகுறித்து பயணிகள் உடனடியாக ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த காவல்துறையினரிடம் கூறியுள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் அந்த வாலிபரை அழைத்து விசாரணை செய்துள்ளனர்.

அந்த விசாரணையில் அந்த வாலிபர் காரிமங்கலம் கிராமத்தை சேர்ந்த சண்முகசுந்தரம் என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் சண்முகசுந்தரத்தை கைது செய்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |