Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மொத்தம் 3 1/2 கோடி ரூபாய்…. காலி செய்ய மறுத்த கணவன்-மனைவிகள்…. போலீஸ் நடவடிக்கை….!!

3 1/2 கோடி ரூபாய்க்கு வீட்டை விற்றுவிட்டு அதை காலி செய்ய மறுத்த கணவன் மற்றும் 2 மனைவிகளை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சென்னை மாவட்டத்தில் உள்ள வியாசர்பாடி அடுத்ததாக இருக்கும் எம்.கே.பி நகர் 3-வது லிங்க் ரோட்டில் முனிஸ்வர கணேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கொடுங்கையூர் மீனம்பாள் சாலையில் இருக்கும் ரமேஷ் என்பவரது முதல் மனைவியை மற்றும் 2-வது மனைவி கவுரி ஆகியோருக்கு சொந்தமான வீட்டை 3 1/2 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளார். இந்நிலையில் வீட்டை விற்ற அவர்கள் அதை காலி செய்யாமல் வேறு ஒருவருக்கு 1 1/2 கோடி ரூபாய்க்கு லீசுக்கு விட்டதாக கூறப்படுகிறது.

இதனால் தான் கொடுத்த பணத்தை திரும்ப தரும்படி முனிஸ்வர கணேசன் கேட்டுள்ளார். ஆனால் அவர்கள் பணத்தையும் கொடுக்காமல், வீட்டையும் காலி செய்து கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்துள்ளனர். இது தொடர்பாக முனிஸ்வர கணேசன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் ரமேஷ் மற்றும் அவருடைய மனைவிகளான வள்ளி, கவுரி ஆகிய 3 பேரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

Categories

Tech |