தொழில் நிறுவனங்களை ஊழியர்களுக்கான தொழில் வரியை தாமதமின்றி செலுத்துமாறு வலியுறுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மத்திய, மாநில, பிற துறைச் சார்ந்த அதிகாரி, பணியாளர், தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்கள், தொழில் புரிவோர் மற்றும் வணிகர்கள் ஆகியோரிடம் இருந்து ஆறு மாதத்துக்கு ஒரு முறை தொழில் வரி வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் 2022-2௦23ஆம் நிதி ஆண்டுக்கான முதலாம் அரையாண்டு தொழில் வரியை சம்பந்தப்பட்ட வருவாய் அதிகாரி பெயரில் காசோலைகள் அல்லது வரைவோலைகள் மூலமாக மாநகராட்சி உரிம ஆய்வாளர்களிடம் செலுத்தி ரசீது பெற்றுக் கொள்ளலாம். பின்னர் www.chcnnaicorporation.gov.in என்ற இணையதளம் மூலமாக எந்தவித பரிமாற்ற கட்டணம் இல்லாமல் தொழில் வரி செலுத்தலாம்.
இதில் மண்டலங்கள் மற்றும் வார்டு அலுவலகங்களில் அமைந்திருக்கும் இ-சேவை மையங்களிலும் தொழில் வரி செலுத்தலாம். எனவே தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழில் உரிமையாளர்கள் தங்களிடம் பணிபுரிபவர்களின் சம்பளத்தில் ஆகஸ்ட் மாதம் தொழில் வரியினை பிடித்தல் செய்து செப்டம்பர் மாதம் இறுதிக்குள் அதற்குண்டான விவரங்களுடன் தாக்கல் செய்து தொழில் வரி செலுத்தி விட வேண்டும். இதில் தவறும் பட்சத்தில் அபராதம் கணக்கீடு செய்து வசூலிக்கப்படும். இதனை தொடர்ந்து மாநகராட்சியின் அடிப்படை வசதிகளான சாலை வசதி, தெரு விளக்கு குப்பைகளை அகற்றுதல் போன்ற பணிகளை மேற்கொள்ள மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரிகளை உடனே செலுத்தி ஒத்துழைப்பு வழங்குமாறு மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறப்பட்டுள்ளது.