நீலகிரி மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் பொழுது பட்டாசு வெடிக்க கூடாது என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டிருக்கின்றார்.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஆட்சியர் அலுவலகத்தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் மற்றும் நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அப்போது பேசப்பட்டதாவது, விநாயகர் சிலையின் பாதுகாப்பிற்கு அந்தந்த அமைப்பினரே பொறுப்பேற்று சிலைகள் விசர்சனம் செய்யும் வரை இரவும் பகலும் குறைந்தபட்சம் 10 நபர்கள் பாதுகாப்புடன் போலீசாருக்கு உதவியாக இருக்க வேண்டும்.
அதன் நகல் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திற்கு அளிக்கப்பட வேண்டும். அட்டையில் சிலையை அமைக்கும் தேதி மற்றும் ஊர்வல தேதி உள்ளிட்டவற்றை குறிப்பிட்டு தொங்க விட வேண்டும். குறிப்பிட்ட தேதியில் சிலையை கண்டிப்பாக அந்த இடத்திலிருந்து எடுத்து விட வேண்டும். திறந்தவெளியில் பாதுகாப்பு இன்றியும் எளிதில் தீப்பிடிக்க கூடிய பழுதான மின்சார ஒயர்கள் அருகாமையில் இருக்கும் இடத்தில் சிலைகளை வைக்க கூடாது. மேலும் ஒலிபெருக்கி வைத்து யாரும் பேசக்கூடாது. சிலை ஊர்வலத்தின் பொழுது விநாயகர் சதுர்த்தி ஊர்வலமானது பள்ளிவாசல்கள் அருகே வரும் பொழுது அதிகமாக கோஷங்களை எழுப்புவது பள்ளிவாசல் பகுதியை கடக்க தாமதம் செய்வது உள்ளிட்ட செயல்பாடுகளில் ஈடுபடக்கூடாது. அதிலும் குறிப்பாக பட்டாசு வெடிக்க கூடாது, கலர் பொடிகளை துவக்க கூடாது என கூறியுள்ளார்.