புதுப்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் மூக்கண்ட பள்ளி பகுதியில் சந்திரசேகர் என்பவர் வசித்து வருகிறார். கடந்த ஏப்ரல் மாதம் சந்திரசேகர் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த ஐஸ்வர்யா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் கிராமத்தில் நடைபெறும் கோவில் திருவிழாவிற்கு வருமாறு ஐஸ்வர்யாவின் தாய் அனிதா தம்பதியினரை அழைத்துள்ளார். அதற்கு திருவிழாவுக்கு போக வேண்டாம் என சந்திரசேகர் கூறியதாக தெரிகிறது.
இதனால் மன உளைச்சலில் இருந்தால் ஐஸ்வர்யா தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று ஐஸ்வர்யாவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.