அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டதாக எனக்கு எந்த எழுத்துப்பூர்வமான கடிதமோ தகவலோ வரவில்லை என கே சி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
கடந்த கடந்த மாதம் 25 ஆம் தேதி அதிமுக வின் பெயரில் போலி இணையதளம் நடத்திய குற்றத்திற்காக அதிமுக முன்னாள் எம்பி கே சி பழனிச்சாமி கைதுசெய்யப்பட்டார். இதனை தொடர்ந்து சில தினங்களுக்கு முன்பு ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தார் பழனிசாமி. அவரது ஜாமீன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்யவே மறு தாக்கல் செய்திருந்தார். கே சி பழனிச்சாமி மனுவை விசாரித்த நீதிபதிகள் அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உள்ளனர்.
இதனைத் தொடர்ந்து வெளியில் வந்த கே சி பழனிச்சாமி நிபுணர்களிடம் கூறியதாவது,
“நேற்று முன்தினம் ஜாமின் எனக்கு கிடைத்து விட்டது ஆனால் ஒரு நாள் கழித்து தான் நான் வெளியில் வந்துள்ளேன். அதிமுகவில் இருந்து நான் நீக்கப்பட்டதாக எழுத்துப்பூர்வமாக கடிதம் ஒன்றும் எனக்கு கொடுக்கப்படவில்லை. சிறையில் வைத்தது என்னை அல்ல ஜெயலலிதா எம்ஜிஆர் கொள்கைகளை தான் சிறை வைத்துள்ளனர். என்னை சிறையில் வைத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எனது நன்றிகள். எனது விலாசத்திற்கு என்னை நீக்கியதாக கடிதம் அனுப்பியதற்கான ஆதாரம் ஏதேனும் அதிமுகவிடம் உள்ளதா? நான் என்றும் அதிமுக கட்சியில் தான் இருப்பேன். வேறு கட்சிகளுக்கு செல்லமாட்டேன். 100 முறை சிறைக்கு அனுப்பினாலும் நான் என்றும் அதிமுகவில் தான் இருப்பேன். முன்பைவிட அதிக உத்வேகத்துடன் வழக்குகளை நடத்தி முடிப்பேன்” என கூறினார்